/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் 'தாயுமானவர்' திட்டத்தில் 82,746 பேர் பயன் எம்.பி., ராஜேஸ்குமார் தகவல்
/
நாமக்கல்லில் 'தாயுமானவர்' திட்டத்தில் 82,746 பேர் பயன் எம்.பி., ராஜேஸ்குமார் தகவல்
நாமக்கல்லில் 'தாயுமானவர்' திட்டத்தில் 82,746 பேர் பயன் எம்.பி., ராஜேஸ்குமார் தகவல்
நாமக்கல்லில் 'தாயுமானவர்' திட்டத்தில் 82,746 பேர் பயன் எம்.பி., ராஜேஸ்குமார் தகவல்
ADDED : ஆக 13, 2025 05:43 AM
நாமக்கல்: ''நாமக்கல் மாவட்டத்தில், 'தாயுமானவர்' திட்டம் மூலம் மாதந்-தோறும், 82,746 பேருக்கு, வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினி-யோகம் செய்யப்படும்,'' என, எம்.பி., ராஜேஸ்குமார் கூறினார்.
வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ரேஷன் பொருட்களை, அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்கும், 'தாயு-மானவர்' திட்டத்தை, தமிழக முதல்வர் சென்னையில் நேற்று துவக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்கோடம்பாளையம் ரேஷன் கடையில், 'தாயுமா-னவர்' திட்ட துவக்க விழா நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். மாநகர மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், அந்த கிராமத்தை சேர்ந்த காளியம்மாள், 79, செல்-லம்மாள், 82, வாங்கலாயி, 73 ஆகியோரது வீடுகளுக்கு நேரடி-யாக சென்று அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்-களை வழங்கினார்.
அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், 'தாயுமானவர்' திட்டத்தில், 915 ரேஷன் கடைகளை சேர்ந்த, 70 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடி-மக்களை கொண்ட, 52,099 ரேஷன் கார்டுதாரர்களும், 2,945 ரேஷன் கார்டுகளை கொண்ட மாற்றுத்திறனாளிகளும், என மொத்தம், 55,044 ரேஷன் கார்டுகளில் உள்ள, 82,746 பயனாளர்-களுக்கு, அவர்களது வீடு தேடி சென்று, ரேஷன் பொருட்கள் மாதம் தோறும் வினியோகம் செய்யப்படும். ஒவ்வொரு மாதமும், இரண்டாவது சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இத்-திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரகுமார், கூட்டுறவு சங்கங்-களின் துணைப்பதிவாளர்(பொ) செல்வி உள்பட பலர் பங்கேற்-றனர்.