/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
10,480 விவசாயிகளுக்கு ரூ.8.40 கோடி மானியம் சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்
/
10,480 விவசாயிகளுக்கு ரூ.8.40 கோடி மானியம் சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்
10,480 விவசாயிகளுக்கு ரூ.8.40 கோடி மானியம் சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்
10,480 விவசாயிகளுக்கு ரூ.8.40 கோடி மானியம் சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்
ADDED : அக் 14, 2024 05:31 AM
நாமக்கல்: 'தமிழகத்தில், 10,480 விவசாயிகளுக்கு, 2022--23 மற்றும் 2023-24ம் நிதியாண்டில், 8.40 கோடி ரூபாய் மானியம் வழங்கப்-பட்டுள்ளது' என, சுற்றுலா மற்றும் சர்க்கரைத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கூறினார்.
மோகனுார் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், விவசா-யிகள், தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், ஆலை தலைமை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. எம்.பி., ராஜேஸ்-குமார், சர்க்கரை துறை இயக்குனர் அன்பழகன், நாமக்கல் கலெக்டர் உமா, எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக சுற்றுலா மற்றும் சர்க்கரைத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை வகித்து பேசியதாவது:நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை, நாமக்கல் கூட்டுறவு சர்க்கரை ஆலை என மாற்றித்தர கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்-கைகள் மேற்கொள்ளப்படும். உயிரிவாயு தயாரிப்புகள் குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில், 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 22 தனியார் என, மொத்தம், 40 சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. 2022-23 மற்றும் 2023-24ம் நிதியாண்டில், 10,480 விவசாயிகளுக்கு, 8.40 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. 2023-24ம் அரவை பரு-வத்தில், நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு மேல், தமிழக அரசால் டன் ஒன்றுக்கு, 215 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, கரும்பு விலை டன் ஒன்றுக்கு, 3,135 ரூபா-யாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக அரசால், 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு, பொதுத்துறை மற்றும் தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்-காக, கடந்த, 3 ஆண்டுகளில், 775 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, இணை மின் உற்பத்தி நிலையம் மற்றும் சர்க்கரை ஆலையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, கரிய-மில வாயு சிலிண்டரில் அடைக்கும் அலகினை, சுற்றுலா மற்றும் சர்க்கரைத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.
அட்மா குழுத்தலைவர் நவலடி, சர்க்கரைத்துறை கூடுதல் இயக்-குனர் பாலமுருகன், ஆலை மேலாண் இயக்குனர் மல்லிகா, சர்க்க-ரைத்துறை தலைமை பொறியாளர் பிரபாகரன், அரசுத்துறை அலு-வலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.