/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிளஸ் 1ல் 92.58 சதவீதம் தேர்ச்சி:நாமக்கல் மாவட்டம் மாநில அளவில் 14ம் இடம்
/
பிளஸ் 1ல் 92.58 சதவீதம் தேர்ச்சி:நாமக்கல் மாவட்டம் மாநில அளவில் 14ம் இடம்
பிளஸ் 1ல் 92.58 சதவீதம் தேர்ச்சி:நாமக்கல் மாவட்டம் மாநில அளவில் 14ம் இடம்
பிளஸ் 1ல் 92.58 சதவீதம் தேர்ச்சி:நாமக்கல் மாவட்டம் மாநில அளவில் 14ம் இடம்
ADDED : மே 15, 2024 11:09 AM
நாமக்கல்: பிளஸ் 1 பொதுத்தேர்வில், 92.58 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில், நாமக்கல் மாவட்டம், 14ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்தாண்டு, 4ம் இடம் பெற்ற நிலையில், 10 இடங்கள் பின்னோக்கி சென்றுள்ளது, பெற்றோர், கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், கடந்த மார்ச், 4 முதல், 25 வரை, பிளஸ் 1 பொதுத்தேர்வு நடந்து முடிந்தது.
இதையடுத்து, அதன் முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. அதில், நாமக்கல் மாவட்டத்தில், 197 பள்ளிகளை சேர்ந்த, 9,046 மாணவர்கள், 8,172 மாணவியர் என, மொத்தம், 18,298 பேர் தேர்வு எழுதினர். அவர்களில், 8,172 மாணவர்கள், 8,767 மாணவியர் என, மொத்தம், 16,941 பேர் தேர்ச்சி
பெற்றனர்.
மாணவர்களின் தேர்ச்சி, 90.36, மாணவியரின் தேர்ச்சி, 94.76 சதவீதம். ஒட்டு மொத்தமாக, 92.58 சதவீதம் தேர்ச்சியடைந்து, மாநில அளவில், 14ம் இடம் பிடித்தது. கடந்தாண்டு, 95.60 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில், 4ம் இடம் பிடித்திருந்தது. இந்தாண்டில், 3.02 சதவீதம் குறைவாக தேர்ச்சி பெற்றதுடன், மாநில அளவில், 14ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வில், 6 அரசு பள்ளிகள், 42 தனியார் பள்ளிகள், என, மொத்தம், 48 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
கடந்த, 6ல் வெளியான பிளஸ் 2 பொதுத்தேர்வில், 96.10 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில், 10ம் இடமும், 10ல் வெளியான, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 93.51 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில், 14ம் இடமும், நாமக்கல் மாவட்டம் பெற்றுள்ளது. கல்வி மாவட்டம் என, பெயர் பெற்ற நாமக்கல் மாவட்டம், தொடர்ந்து, தேர்ச்சி சதவீதம் சரிந்து வருவது, பெற்றோர், கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

