/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
932 கிலோ புகையிலை பொருள் பறிமுதல் செய்து அழிப்பு
/
932 கிலோ புகையிலை பொருள் பறிமுதல் செய்து அழிப்பு
ADDED : ஆக 07, 2025 01:36 AM
எருமப்பட்டி, நாமக்கல் மாவட்டத்தில், உணவு பாதுகாப்புத்துறை, உள்ளாட்சித்துறையினர் இணைந்து, பள்ளி, கல்லுாரிகளுக்கு அருகே உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என, சோதனை நடத்தினர். அதனப்டி, கடந்த ஏப்., முதல் ஜூலை வரை, 75,593 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. அதில், 174 கடைகளில் இருந்து, 932.17 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் முதலில் சிக்கிய, 142 பேருக்கு, 35 லட்சத்து, 50,000 ரூபாய் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. இரண்டாம் முறை சிக்கிய, 31 பேருக்கு, 15 லட்சத்து, 50,000 ரூபாய், 3ம் முறை சிக்கிய, ஒரு கடை உரிமையாளருக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபாரதம் விதித்து வசூலிக்கப்பட்டது. மேலும், 2 மற்றும் 3ம் முறை சிக்கிய கடை உரிமையாளர்களுக்கு, 30 நாட்கள் கடையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பறிமுதல் செய்யப்பட்ட, 932.17 கிலோ புகையிலை பொருட்களை, நாமக்கல் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீயிட்டு எரித்து அழிக்கப்பட்டது. புகையிலை ஒழிப்பு குழு உறுப்பினர்களான, உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தங்கவிக்னேஷ், நாமக்கல் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார், நாமக்கல் மாநகர துப்புரவு அலுவலர் திருமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.