/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பாக்கு வியாபாரி விபரீத முடிவு
/
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பாக்கு வியாபாரி விபரீத முடிவு
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பாக்கு வியாபாரி விபரீத முடிவு
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பாக்கு வியாபாரி விபரீத முடிவு
ADDED : டிச 12, 2025 05:15 AM
சேந்தமங்கலம், டிச. 12
கொல்லிமலையில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் பாக்கு வியாபாரி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொல்லிமலை அடிவார பகுதியான வெண்டாங்கி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி விஜயா. இவர்களுடைய மகன் பூபதி, 30. மூவரும் பாக்கு வியாபாரம் செய்து வருகின்றனர். தற்போதைய நிலையில், பாக்கு தொழிலில் லாபம் ஏதும் இல்லாததால், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடனும் அதிகமாகி விட்டது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த பூபதி, நேற்று காலை திடீரென காணாமல் போனார்.
பூபதியின் பெற்றோர், மகனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். இறுதியாக வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று பார்த்த போது, அங்கு பூபதி கயிற்றை மாட்டி துாக்கில் தொங்கி கொண்டு இருந்தார். இதை பார்த்த பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். சேந்தமங்கலம் போலீசார் பூபதி உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

