/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சி
/
விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சி
ADDED : டிச 12, 2025 05:16 AM
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த வடுகம் கிராமத்தில், தனியார் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியை சேர்ந்த இறுதியாண்டு மாணவியர், 10 பேர் தங்களது கிராமப்புற மற்றும் விவசாய பணி அனுபவ பயிற்சியை தொடங்கினர்.
வேளாண் உதவி இயக்குனர் தனலட்சுமி பயிற்சியை தொடங்கி வைத்தார். வேளாண் கல்லுாரி பயிர் வினைவியல் துறை உதவி பேராசிரியர் கண்மணி, மாணவியரை வழி நடத்தினார். பயிற்சியின் போது கல்லுாரி மாணவியர், விவசாயிகளுக்கு பயிர் சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து செயல்விளக்கம் அளித்தனர். குறிப்பாக 'நீல ஒட்டும் பொறி, மஞ்சள் ஒட்டும் பொறி மற்றும் டெல்டா பொறிகளை ஏக்கர், 1க்கு எண்கள், 5 என்ற விகிதத்தில் வயல்களில் வைப்பதன் மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்' என நேரில் அமைத்து காண்பித்தனர்.மேலும் 'வயல்களின் ஓரங்களில் வரப்பு பயிராக தட்டைபயறு, ஆமணக்கு மற்றும் மக்காச்சோளம் ஆகியவற்றை நடவு செய்வதால், பூச்சிகளின் தாக்குதலை குறைக்கலாம்.
இதனால் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது குறைவதோடு, சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுத்து நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்யலாம்' என. விவசாயிகளுக்கு எடுத்து கூறினர்.

