/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புதிய கண்டுபிடிப்புகளுக்கு உருவளிக்கும் முகாம்
/
புதிய கண்டுபிடிப்புகளுக்கு உருவளிக்கும் முகாம்
ADDED : ஆக 12, 2024 07:00 AM
நாமக்கல்: திருச்செங்கோட்டில், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் உயர் கல்வி மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு, உருவளிக்கும் முகாம், நேற்று நடந்தது.
முதன்மை பயிற்றுனர் மார்ட்டின் தலைமை வகித்தார்.பள்ளி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ, மாணவியர்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில்முனைதல் சிந்தனையை உருவாக்க, ஆண்டுதோறும் புத்தாக்க கண்டுபிடிப்பு போட்டி நடத்தப்பட்டு சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கி வருகிறது. நடப்பாண்டு, 9,355 மாணவர் அணிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரப்பெற்று, முதல்கட்ட ஆய்வுக்கு பின், 474 அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.அதன்படி, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் இருந்து, 44 அணிகளிலிருந்து, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், மாணவ வழிகாட்டிகள், நடுவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் மற்றும் கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிமியோன்ராஜ் செய்திருந்தனர்.

