/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விதிமீறிய 12 வாகனங்களுக்கு ரூ.2.8 லட்சம் அபராதம் விதிப்பு
/
விதிமீறிய 12 வாகனங்களுக்கு ரூ.2.8 லட்சம் அபராதம் விதிப்பு
விதிமீறிய 12 வாகனங்களுக்கு ரூ.2.8 லட்சம் அபராதம் விதிப்பு
விதிமீறிய 12 வாகனங்களுக்கு ரூ.2.8 லட்சம் அபராதம் விதிப்பு
ADDED : ஜூன் 22, 2025 12:53 AM
ராசிபுரம், ராசிபுரத்தில், வாகன தணிக்கையின்போது விதிமீறிய, 12 வாகனங்களுக்கு, 2.80 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன் உத்தரவுப்படி, ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் தலைமையில், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று காலை வரை, ராசிபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, தகுதிச்சான்று புதுப்பிக்காத டாடா ஏஸ், மேக்சி கேப் என, ஒன்பது சரக்கு வாகனங்கள், அதிக பாரம் ஏற்றிச்சென்றதாக, மூன்று கனரக வாகனங்கள் என, மொத்தம், 12 வாகனங்கள் தணிக்கையில் சிக்கின. அந்த வாகனங்கள் ராசிபுரம், வெண்ணந்துார் போலீஸ் ஸ்டேஷன்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகன உரிமையாளர்களுக்கு, இரண்டு லட்சத்து, 80,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
'விதிமீறி வாகனம் இயக்கினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்' என, ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும், ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளான வெண்ணந்துார், நாமகிரிப்பேட்டை, மங்களபுரம், ஆயில்பட்டி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து இது போன்ற சோதனைகள் நடைபெறும் என தெரிவித்தார்.