/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புகையிலை விற்ற கடைக்கு ரூ.25,000 அபராதம்
/
புகையிலை விற்ற கடைக்கு ரூ.25,000 அபராதம்
ADDED : நவ 07, 2024 12:59 AM
புகையிலை விற்ற கடைக்கு
ரூ.25,000 அபராதம்
மல்லசமுத்திரம், நவ. 7-
மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில், நேற்று, இ.ஓ., மூவேந்திரபாண்டியன், உணவு பாதுகாப்பு அலுவலர் கார்த்திகேயன், மல்லசமுத்திரம் போலீசார், டவுன் பஞ்., பணியாளர்கள் சார்பில், அரசால் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுகிறதா என, ஆய்வு செய்யப்பட்டது. இதில், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த, 2 கடைகளுக்கு, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், பிளாஸ்டிக் கேரி பேக்குகள் விற்பனை செய்த, ஐந்து கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். இதுபோல் தொடர்ந்து அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை, கேரி பேக்குகள் விற்பனை செய்யக்கூடாது என, கடை உரிமையாளர்களிடம் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.