/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'குல்பி' ஐஸ் தயாரித்த வீட்டில் தீ விபத்து
/
'குல்பி' ஐஸ் தயாரித்த வீட்டில் தீ விபத்து
ADDED : செப் 28, 2024 01:14 AM
'குல்பி' ஐஸ் தயாரித்த வீட்டில் தீ விபத்து
ராசிபுரம், செப். 28-
'குல்பி' ஐஸ் தயாரித்த வீட்டில் இருந்து ஏற்பட்ட தீவிபத்தில், 10,000 ரூபாய் உள்பட, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
ராசிபுரம் எம்.எல்.ஏ., அலுவலகம் பின்புறம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான இடத்தில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சாஹர்மல், 55, ஆட்களை வைத்து, 'குல்பி' ஐஸ் தயாரித்து வருகிறார்.
நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில், உள்ளே இருந்து புகை வெளியேறியது. இதையறிந்த அக்கம் பக்கத்தினர், ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ராசிபுரம் தீயணைப்புதுறை வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில், 'குல்பி' ஐஸ் தயார் செய்யும் பொருட்கள், பிரிட்ஜ், ஏர்கூலர் உள்ளிட்ட, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. மேலும், 100, 200, 500 என, 10,000 ரூபாய் நோட்டுகள் எரிந்து சாம்பலாகின. ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.