/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மீன் பிடிக்க சென்றவர் ஆற்றில் மூழ்கி பலி
/
மீன் பிடிக்க சென்றவர் ஆற்றில் மூழ்கி பலி
ADDED : டிச 01, 2025 02:42 AM
ப.வேலுார்: கோவை, பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சின்ன கண்ணு மகன் விக்னேஷ் குமார், 31; அதே பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி, 30; இருவரும், கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. தற்போது, ப.வேலுார் அருகே, கொந்தளம் பகுதியில் கரும்பு ஆலக்கொட்டாயில் கூலி வேலை செய்து வந்-தனர்.
கடந்த, 28 இரவு, 7:00 மணிக்கு, வீட்டின் அருகே உள்ள காவிரி ஆற்றில் மீன் பிடிக்க செல்வதாக கூறிவிட்டு சென்ற விக்-னேஷ்குமமார் மீண்டும் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலையில் காவிரி ஆற்றங்கரையோரம் தேடி பார்த்தபோது, இவர் கொண்டு சென்ற டூவீலர் நிறுத்தப்பட்டிருந்தது. அக்கம் பக்கத்-தினர் உதவியுடன், காவிரி ஆற்றில் இறங்கி தேடியபோது, ஆற்றில் இருந்து விக்னேஷ் குமார் சடலமாக மீட்கப்பட்டார். ப.வேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

