/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நள்ளிரவில் தீ விபத்து; கார், டூவீலர்கள் நாசம்
/
நள்ளிரவில் தீ விபத்து; கார், டூவீலர்கள் நாசம்
ADDED : அக் 21, 2024 07:26 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ், 25; இவர் தனியார் நிறுவனங்களுக்கு கணக்குகளை சரிபார்க்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு வீட்டுக்கு சென்ற தினேஷ், கார் நிறுத்தும் இடத்தில் டூவீலரை நிறுத்திவிட்டு துாங்க சென்றார். நள்ளிரவு, 12:00 மணிக்கு தினேஷ் வீட்டிலிருந்து புகை வெளியேறி உள்ளது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர், தினேஷுக்கு மொபைல் போனில் தகவல் தெரிவித்துள்ளனர். தினேஷ் குடும்பத்தினர் கீழே இறங்கி வருவதற்குள், தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
உடனடியாக, குமாரபாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், கதவை திறக்க முடியாததால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். தொடர்ந்து, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், ஒரு கார், 2 டூவீலர்கள் எரிந்து நாசமாகின. குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.