/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அபாய கிணற்றுக்கு தடுப்பு சுவர் தேவை
/
அபாய கிணற்றுக்கு தடுப்பு சுவர் தேவை
ADDED : மார் 17, 2025 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார்: வெண்ணந்துார் அருகே, தச்சங்காடு பகுதியில் இருந்து கோம்பை காடு செல்லும் வழியில் சாலையோ-ரத்தில், திறந்தவெளியில் அபாய கிணறு உள்ளது. இவ்வழியாக, நாள்தோறும் ஏராளமான தனியார் பள்ளி, கல்லுாரி வாகனங்கள், கனரக, இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. திறந்தவெளி கிணறு, சாலையின் வளைவு பகுதியில் அமைந்துள்ளது.
இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொது மக்கள் சிறிது கவனம் சிதறினாலும், கிணற்றில் பாய்ந்து அசம்பாவிதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரும் விபத்து நேரும் முன், அபாய கிணற்றை சுற்றி தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.