/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விபத்து நடந்த பகுதியில் வேகத்தடை அவசியம்
/
விபத்து நடந்த பகுதியில் வேகத்தடை அவசியம்
ADDED : மே 27, 2024 06:04 AM
பள்ளிப்பாளையம் : வெப்படை அருகே, விபத்து நடந்த பகுதியில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை பஸ் ஸ்டாப் பகுதியில் இருந்து ரங்கனுார் செல்லும் சாலையில், தனியார் நுாற்பாலை அமைந்துள்ள பகுதியில் சாலை சற்று இறக்கமாகவும், வளைவாகவும் உள்ளது. இதனால் வேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது.
கடந்த, 19ம் தேதி இந்த சாலை பகுதியில் டூவீலரில் வந்த பிரசாந்த் என்ற வாலிபர் விபத்தில் சிக்கி, மூளை சாவு அடைந்தார். பிரசாந்த்தின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.
எனவே வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, இப்பகுதியில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும், விபத்தை தடுக்கவும் வேகத்தடை, எச்சரிக்கை பலகை மற்றும் போதிய மின் விளக்கு வசதி செய்து தர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

