/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலை நீர் வீழ்ச்சியில் குளிக்க சென்ற வாலிபர் பலி
/
கொல்லிமலை நீர் வீழ்ச்சியில் குளிக்க சென்ற வாலிபர் பலி
கொல்லிமலை நீர் வீழ்ச்சியில் குளிக்க சென்ற வாலிபர் பலி
கொல்லிமலை நீர் வீழ்ச்சியில் குளிக்க சென்ற வாலிபர் பலி
ADDED : அக் 19, 2024 02:22 AM
எருமப்பட்டி: கொல்லிமலையில், நீர் வீழ்ச்சியில் குளிக்க சென்ற வாலிபர், 40 அடி பள்ளத்தில் விழுந்து பலியானார்.
கொல்லிமலையில், கடந்த சிலநாட்களாக பெய்த மழையால் திடீர் நீர்வீழ்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. வனப்பகுதியில் உள்ள ஆபத்தை உணராமல், மக்கள் திடீர் அருவிகளில் ஆர்வமாக குளிக்க செல்கின்றனர். சேந்தமங்கலம் அடுத்த நடுக்கோம்பை, மிதிகுண்டு, காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் செல்வம் மகன் சதீஷ், 38. இவர் நேற்று மதியம், 1:00 மணியளவில் கொல்லிமலை செல்லும் மலைப்பாதையில், 9வது கொண்டை ஊசி வளைவில் இருந்து வனப்பகுதிக்குள் நடந்து சென்றுள்ளார்.அப்போது அங்குள்ள
நீர் வீழ்ச்சியில் குளிக்க சென்ற போது, கால் தவறி, 40 அடி பள்-ளத்தில் விழுந்து இறந்தார். இது குறித்து அங்கிருந்தவர்கள் சேந்தமங்கலம் தீயணைப்புதுறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் சடலத்தை கைப்-பற்றி, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாழவந்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

