ADDED : அக் 31, 2024 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம்
டவுன் பஞ்சாயத்தில், பழமையான சோமேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவில் அருகே, தெப்பக்குளம் உள்ளது. இந்த குளம், கடந்த, 30
ஆண்டுகளாக கழிவுநீர் கலந்து பராமரிப்பு இன்றி இருந்தது.
குளத்தில்
உள்ள கழிவுநீரை, படகு மூலம் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.
அப்போது, படகில் திடீரென உருண்டை வடிவில் உருவம் ஒன்று இருந்ததை
பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதை எடுத்து பார்த்த போது, ஆமை என
தெரியவந்தது. 2 கிலோ எடையில் இருந்த இந்த ஆமையை ஏராளமானோர் பார்த்து
சென்றனர்.