ADDED : பிப் 29, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினர், நாமக்கல்லில் தொடர் காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ளனர். மாவட்ட சி.பி.எஸ்., ஒருங்கிணைப்பாளர் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மாலை முதல் தொடங்கப்பட்டுள்ள தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு, ஆசிரியர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். மனோன்மணி முன்னிலை வகித்தார். அத்தியப்பன் கோரிக்கையை விளக்கி பேசினார்.
அதில், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், இமாச்சல்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துள்ளனர். அதேபோல், தமிழகத்திலும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

