/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பஸ் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் சாவு
/
பஸ் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் சாவு
ADDED : நவ 11, 2024 08:00 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் சேலம் சாலை பஸ் ஸ்டாண்ட் அருகே, கவரிங் கடையில் பணியாற்றி வந்தவர் திரிஷா, 19. இவர், நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு வேலை முடிந்து, எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள வீட்டுக்கு செல்ல தயாரானார். அப்போது வீட்டின் அருகே வசிக்கும், 17 வயது சிறுவன் ஓட்டி வந்த, 'ஹீரோ ஸ்பிளண்டர் பிளஸ்' டூவீலரில் அமர்ந்து சென்றார்.
ஆர்.ஏ.எஸ்., தியேட்டர் அருகே சென்ற போது, முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை முந்த முயன்றனர். அதில், நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்ததில், பஸ்சின் பின் சக்கரத்தில் திரிஷாவின் உடல் சிக்கி நசுங்கியது. படுகாயமடைந்த திரிஷாவை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.