sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

புத்தாண்டு விடுமுறைக்கு ஊருக்கு வந்த வாலிபர் கத்தியால் குத்தி படுகொலை

/

புத்தாண்டு விடுமுறைக்கு ஊருக்கு வந்த வாலிபர் கத்தியால் குத்தி படுகொலை

புத்தாண்டு விடுமுறைக்கு ஊருக்கு வந்த வாலிபர் கத்தியால் குத்தி படுகொலை

புத்தாண்டு விடுமுறைக்கு ஊருக்கு வந்த வாலிபர் கத்தியால் குத்தி படுகொலை


ADDED : ஜன 03, 2025 03:57 AM

Google News

ADDED : ஜன 03, 2025 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: ஆங்கில புத்தாண்டு விடுமுறைக்கு, ஊருக்கு வந்த வாலிபர், முன் விரோதம் காரணமாக கத்தியால் குத்தி கொலை செய்யப்-பட்டார்.

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே சிங்கிலி-பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயக்கொடி என்பவரது மகன் சஞ்சய், 22. இவர், கோவையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். ஆங்கில புத்தாண்டு விடுமுறைக்காக இவர் ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு வேலக்கவுண்டம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சஞ்சய், பெருக்காம்பாளையத்தை சேர்ந்த யஸ்வந்த், அப்பநாயக்-கனுாரை சேர்ந்த சூர்யா உட்பட 4 பேர் மது அருந்தி உள்ளனர். அப்போது போதையில் இருந்த சஞ்சய், யஸ்வந்த் இடையே தக-ராறு ஏற்பட்டுள்ளது. இதில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சரமாரியாக சஞ்சயை தாக்கியதில் அவர் பலத்த காயம-டைந்து, ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரி-ழந்தார். சஞ்சயை வெட்டியவர்கள் அங்கிருந்து தப்பினர்.

வேலகவுண்டம்பட்டி போலீசார், சஞ்சய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடியவர்களை, பரமத்தி டி.எஸ்.பி., சங்கீதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வரு-கின்றனர். உயிரிழந்த சஞ்சய் ஊரான சிங்கிலிபட்டிக்கு அடிக்கடி யஸ்வந்த் வந்து சென்றுள்ளார். நீ ஊருக்கு வரக்கூடாது என யஸ்-வந்திடம் சஞ்சய் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன் சஞ்சய் முகத்தில், யஸ்வந்த் சிகரெட் புகையை விட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்-துள்ளது. இந்நிலையில்தான், டாஸ்மாக் கடை அருகே சஞ்சயை, யஸ்வந்த் தரப்பினர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us