ADDED : நவ 11, 2024 08:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: வெண்ணந்துாரை சேர்ந்தவர் தனபால், 23; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இவர் அக்., 25, இரவு, 7:00 மணிக்கு, பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த ஈகாட்டூர் பகுதியில் நிலம் பார்க்க காரில் சென்றார். அப்போது, 4 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்து, தனபாலை தாக்கி விட்டு, 25,000 ரூபாய் மற்றும் மொபல் போனை வழிப்பறி செய்து தப்பினர். இது தொடர்பாக, 4 பேரை கைது செய்த வெப்படை போலீசார், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான சின்னார்பாளையத்தை சேர்ந்த கவுரிசங்கர், 28, என்பவரை, நேற்று காலை, கைது செய்தனர்.