/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குழந்தை திருமணங்கள் இல்லா தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு
/
குழந்தை திருமணங்கள் இல்லா தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு
குழந்தை திருமணங்கள் இல்லா தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு
குழந்தை திருமணங்கள் இல்லா தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு
ADDED : நவ 28, 2024 01:22 AM
குழந்தை திருமணங்கள் இல்லா தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு
ஈரோடு, நவ. 28-
ஈரோடு மாவட்டத்தில் உள்ள, அனைத்து வகை பள்ளிகளிலும் நேற்று காலை வழிபாட்டு கூட்டத்தின் போது, குழந்தை திருமணங்கள் இல்லா இந்தியா திட்டத்தின் கீழ், குழந்தை திருமணங்கள் இல்லா தமிழ்நாடு உறுதிமொழி பள்ளி மாணவிகளால் ஏற்கப்பட்டது. சுற்றுப்புறத்தில், சமூகத்தில் எந்த ஒரு குழந்தை திருமணமும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வேன். எனது பகுதி, சமூகத்தில் குழந்தை திருமணம் நடப்பது தெரிந்தால் அதற்கு எதிராக அனைத்து நடவடிக்கையும் எடுப்பேன். எங்கள் பகுதியில் குழந்தை தொழிலாளர், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை போன்ற அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பேன். குழந்தைகளில் பாதுகாப்பிற்கும், தடையற்ற கல்விக்காகவும் தொடர்ந்து செயல்படுவேன் என மாணவிகள் உறுதிமொழி எடுத்தனர்.ஈரோடு ப.செ.பார்க் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வழிபாட்டு கூட்டத்தின் போது மாணவியர், தலைமை ஆசிரியை சுகந்தி முன்னிலையில் உறுதிமொழி ஏற்றனர். இதே போல் ஈரோட்டில் உள்ள பிற பள்ளிகளிலும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.