/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பண்டைய தமிழர் பாரம்பரிய முறைப்படி பெண்ணுக்கு சீர்வரிசை வழங்கிய தாய்மாமன்
/
பண்டைய தமிழர் பாரம்பரிய முறைப்படி பெண்ணுக்கு சீர்வரிசை வழங்கிய தாய்மாமன்
பண்டைய தமிழர் பாரம்பரிய முறைப்படி பெண்ணுக்கு சீர்வரிசை வழங்கிய தாய்மாமன்
பண்டைய தமிழர் பாரம்பரிய முறைப்படி பெண்ணுக்கு சீர்வரிசை வழங்கிய தாய்மாமன்
ADDED : ஆக 30, 2024 01:27 AM
பண்டைய தமிழர் பாரம்பரிய முறைப்படி பெண்ணுக்கு சீர்வரிசை வழங்கிய தாய்மாமன்
ராசிபுரம், ஆக. 30-
ராசிபுரம் அருகே, பண்டைய தமிழர் பாரம்பரியப்படி பெண்ணுக்கு சீர்வரிசை செய்து, தாய்மாமன் அசத்தியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த பட்டணத்தை சேர்ந்தவர் விஜயகுமார், 40. இவரது மனைவி பிருந்தா. இவர்களுக்கு ஒரு மகன், திவிஷா, 14 என்ற மகள் உள்ளனர். திவிஷாவுக்கு, பட்டணத்தில் உள்ள திருமண மண்டபத்தில், நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இதில், பிருந்தாவின் அண்ணனும், திவிஷாவின் தாய்மாமனுமான மகேஸ்வரன் சீர்வரிசை வழங்க வேண்டியது முறை. இதையடுத்து, பழைய தமிழர் பாரம்பரிய முறைப்படி மகேஸ்வரன்-ஆனந்தி தம்பதியினர் சீர்வரிசைக்கு ஏற்பாடு செய்தனர். 4 கிலோ மீட்டருக்கு முன்புள்ள வடுகம் பனங்காடு பகுதியில் இருந்து, சீர் வரிசை ஊர்வலம் புறப்பட்டது. ஏழு மாட்டு வண்டிகளில், 200 தாம்பாள தட்டுகளில் சீர்வரிசைகளை அடுக்கி வைத்தனர்.
வாழைப்பழம், அன்னாசி, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, தேங்காய், இனிப்பு, காரம், சாக்லெட், கேக் என ஒவ்வொரு தட்டிலும் பல்வேறு பொருட்களை வைத்திருந்தனர். அதுமட்டுமின்றி பட்டு பாவாடை, ஆறு பவுன் நகை, வாழை மரம், காங்கேயம் நாட்டு மாடு, இரண்டு கிடா என அனைத்தையும் மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு, கேரள செண்டை மேளத்துடன் ஊர்வலமாக வந்தனர்.
சீருடன் வந்த மகேஸ்வரனை, விஜயகுமார் குடும்பத்தினர் கைகூப்பி வரவேற்றனர். சீர் வரிசை தட்டுகளை மண்டபத்தில் அடுக்கி வைத்தனர். மண்டபத்தில் பாதி இடம் நிரம்பும் அளவிற்கு சீர் வரிசை தட்டு இருந்தது. திவிஷாவுக்கு மஞ்சள் நீராட்டு விழாவிற்கான நடைமுறைகள் முடித்த பிறகு, சீர் வரிசைகளை வழங்கினர். தங்கை மகளுக்கு தமிழர் பாரம்பரிய முறைப்படி, சீர்வரிசை கொண்டு வந்து அசத்திய தாய்மாமன் குறித்து, தகவல் பரவியதால் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் திருமண மண்டபம் வந்து வேடிக்கை பார்த்து சென்றனர்.

