/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஏ.கே.வி., பப்ளிக் பள்ளி கோ--கோ போட்டியில் சாதனை
/
ஏ.கே.வி., பப்ளிக் பள்ளி கோ--கோ போட்டியில் சாதனை
ADDED : அக் 27, 2024 04:29 AM
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் ஏ.கே.வி., பப்ளிக் பள்ளி, சீனியர் செகண்டரி, சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள், கடந்த, 19ல் மூலப்பள்ளிபட்-டியில் உள்ள கிரீன்வேர்ல்டு சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்த கோ-கோ போட்டியில் விளையாடினர்.
அதில், ஏ.கே.வி., பப்ளிக் பள்ளி மாணவர்கள், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும், 14 வய-துக்குட்பட்டோர் பிரிவிலும் விளையாடினர். இரு பிரிவிலும், 28 பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடமும், 14 வய-துக்குட்பட்டோர் பிரிவில், 2ம் இடமும் பெற்று சான்றிதழ், பதக்கம், கோப்பை வென்று, பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.