/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டிரான்ஸ்பார்மர் அருகே குப்பை அகற்ற நடவடிக்கை தேவை
/
டிரான்ஸ்பார்மர் அருகே குப்பை அகற்ற நடவடிக்கை தேவை
ADDED : நவ 28, 2025 01:24 AM
நாமக்கல், நநாமக்கல்-சேலம் சாலையில் இருந்து ராமாபுரம்புதுார் செல்லும் வகையில் சாலை உள்ளது. அங்கு பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், லாரி பட்டறை, சினிமா தியேட்டர் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அந்த வழியாக நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதி மக்கள் ராமாபுரம்புதுார் சென்று வருவர். மேலும் பள்ளி, கல்லுாரி வாகனங்களும் செல்கின்றன.
இந்நிலையில் அப்பகுதி வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகளுக்கு மின் வினியோகிக்கும் வகையில் எல்.எம்.ஆர்., காம்ப்ளக்ஸ் அருகே, மின்சார டிரான்ஸ்பார்மர் வைக்கப்பட்டுள்ளது. அதன் அருகே பல்வேறு பகுதியில் சேகரிக்கும் குப்பையை கொண்டு வந்து கொட்டு கின்றனர். மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் அதை எடுப்பதற்குள், சிலர் தீ வைத்து எரிக்கின்றனர். எனவே விபத்து ஏற்படுவதற்கு முன், டிரான்ஸ்பார்மரை சுற்றி தடுப்பு வேலி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

