/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
335 பயனாளிகளுக்கு ரூ.3.08 கோடியில் நலத்திட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வழங்கல்
/
335 பயனாளிகளுக்கு ரூ.3.08 கோடியில் நலத்திட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வழங்கல்
335 பயனாளிகளுக்கு ரூ.3.08 கோடியில் நலத்திட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வழங்கல்
335 பயனாளிகளுக்கு ரூ.3.08 கோடியில் நலத்திட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வழங்கல்
ADDED : செப் 16, 2025 02:00 AM
நாமக்கல், பல்வேறு துறை சார்பில், 335 பயனாளிகளுக்கு, 3.08 கோடி ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை, தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
முதல்வர் ஸ்டாலின், சென்னை கலைவாணர் அரங்கில், நேற்று நடந்த அரசு விழாவில், தமிழக அரசின், 'தாயுமானவர்' திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோரை இழந்த குழந்தைகள், 18 வயது வரையிலான பள்ளி படிப்பு முடியும் வரை, இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம், 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும், 'அன்புக்கரங்கள்' திட்டத்தை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவி வழங்கினார்.
தொடர்ந்து, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார்.
எம்.பி., ராஜேஸ்குமார், நாமக்கல் தி.மு.க.,-எம்.எல்.ஏ., ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், பல்வேறு துறை சார்பில், 335 பயனாளி
களுக்கு, 3.08 கோடி ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
தாறுமாறாக ஓட்டியதால் பரபரப்பு
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 100 பேருக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. ஸ்கூட்டர் பெற்ற பயனாளிகள், அவற்றை ஓட்டத்தெரியாமல் விழிபிதுங்கினர். மேலும், ஓட்டி சென்றவர்கள் தாறுமாறாக ஓட்டினர். அதனால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பலர், சரக்கு ஆட்டோவில் எடுத்து சென்றனர். ஸ்கூட்டர் வழங்கும்போது, அவற்றை முறையாக ஓட்ட பயிற்சி கொடுத்தபின் வழங்கினால், இதுபோன்று தடுமாற்றம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.