/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஊதியம் வழங்குவதில் நிர்வாக குறைபாடு: விசாரிக்க கோரிக்கை
/
ஊதியம் வழங்குவதில் நிர்வாக குறைபாடு: விசாரிக்க கோரிக்கை
ஊதியம் வழங்குவதில் நிர்வாக குறைபாடு: விசாரிக்க கோரிக்கை
ஊதியம் வழங்குவதில் நிர்வாக குறைபாடு: விசாரிக்க கோரிக்கை
ADDED : நவ 08, 2025 04:13 AM
ராசிபுரம்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில், ஆசிரி-யர்களுக்கு தர ஊதியம் நிறுத்தி வைத்திருப்பதை கண்டித்து, இரு தினங்களுக்கு முன், வட்டார வளமையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தமிழ்நாடு தொடக்-கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் மாவட்ட கல்வி அலுவல-ருக்கு, மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:ராசிபுரம் ஒன்றியத்தில் பணியாற்றும், 62க்கும் மேற்பட்ட அனைத்து வகை பள்ளி ஆசிரியர்களுக்கும் அக்., மாத ஊதியம் நவ., 4 வரை வழங்கப்படவில்லை. இந்த காலதாமதத்திற்கு நிர்-வாக குறைபாடு தான் காரணம்.
இந்த பொறுப்பற்ற செயல்பாடுகளின் மீது விரிவான ஆய்வும், விசாரணையும் மேற்கொண்டு தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராசிபுரம் ஒன்றியத்தில், நான்கு தலைமை ஆசிரியர்களுக்கு தர ஊதியம் திருத்தி அமைத்து, ஊதிய குறைப்பு செய்யப்பட்டுள்ளது. ராசிபுரம் ஒன்றியத்தில் மட்டும் அவசரமாக செயல்பட்டு ஊதிய குறைப்பு செய்துள்ளனர். மாவட்-டத்தில் எங்கும் இலலாத வகையில் தன்னிச்சையாக செயல்பட்-டுள்ளனர். இதுகுறித்தும் வெளிப்படையாக விசாரணை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

