/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காலி பணியிடங்களை நிரப்பக்கோரி அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்
/
காலி பணியிடங்களை நிரப்பக்கோரி அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்
காலி பணியிடங்களை நிரப்பக்கோரி அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்
காலி பணியிடங்களை நிரப்பக்கோரி அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 08, 2025 04:13 AM
நாமக்கல்: காலி பணியிடங்களை நிரப்பக்கோரி, நாமக்கல் பூங்கா சாலையில், தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவி-யாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் குர்ஷித்பேகம் தலைமை வகித்தார். இதில், அங்கன்-வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக மாற்றி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி, பணிக்கொடையாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு, 10 லட்சம் ரூபாய், உதவியாளர்களுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் வீதம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி-யுடன் கூடிய ஓய்வூதியமாக, 9,000 ரூபாய் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மே மாதம் கோடை விடுமுறை ஒரு மாதம் வழங்க வேண்டும். புதிய, '5ஜி' மொபைல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மொபைல் போனில் உள்ள, டார்ச் லைட்டை ஒளிரவிட்டு கோஷம் எழுப்பினர்.