/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாதந்தோறும் நகர்மன்ற கூட்டம் நடத்துங்கள்' அ.தி.மு.க., கவுன்சிலர் கோரிக்கை
/
மாதந்தோறும் நகர்மன்ற கூட்டம் நடத்துங்கள்' அ.தி.மு.க., கவுன்சிலர் கோரிக்கை
மாதந்தோறும் நகர்மன்ற கூட்டம் நடத்துங்கள்' அ.தி.மு.க., கவுன்சிலர் கோரிக்கை
மாதந்தோறும் நகர்மன்ற கூட்டம் நடத்துங்கள்' அ.தி.மு.க., கவுன்சிலர் கோரிக்கை
ADDED : அக் 02, 2024 02:00 AM
மாதந்தோறும் நகர்மன்ற கூட்டம் நடத்துங்கள்'
அ.தி.மு.க., கவுன்சிலர் கோரிக்கை
குமாரபாளையம், அக். 2-
''வார்டில் உள்ள குறைகளை தெரிவிக்க, மாதந்தோறும் நகர்மன்ற கூட்டம் நடத்த வேண்டும் என, அ.தி.மு.க., கவுன்சிலர், நகர்மன்ற கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார்.
குமாரபாளையம் நகர்மன்ற சாதாரண மற்றும் அவசர கூட்டம், தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது. இதில், முன்னாள் நகர்மன்ற தலைவர் தனசேகரன் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, துணை முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டதற்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு: கோவிந்தராஜ், தி.மு.க.,: வார்டுகளில் குப்பை எடுக்க துாய்மை பணியாளர்கள் முறையாக வருவதில்லை.
ஜேம்ஸ், தி.மு.க.,: எங்கள் வார்டுகளில் குப்பை எடுக்கவும், சாக்கடை சுத்தம் செய்யவும் ஆட்கள் வருவது இல்லை. கேட்டால் குப்பை அள்ள வண்டி இல்லை என, காரணம் கூறுகின்றனர். இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.ராமமூர்த்தி, சுகாதார அலுவலர்: மாஸ் கிளீன் செய்யும் போது அனைத்து வார்டு பணியாளர்களும் சேர்ந்து தான் பணி செய்கின்றனர். அப்போது மட்டும் தான் அவரை அழைத்து செல்வோம். மற்ற நாட்களில் அவர் உங்கள் வார்டில் தான் வேலை செய்து வருகிறார்.
பாலசுப்ரமணி, அ.தி.மு.க.,: சமுதாய கூடம் அமைக்க நிதி ஒதுக்கியும் பணி தொடங்காமல் உள்ளது. இதனை செயல்படுத்த வேண்டும். மாதந்தோறும் நகர்மன்ற கூட்டம் நடத்த வேண்டும். போன மாதம் ஏன் கூட்டம் நடத்தவில்லை? கூட்டம் நடத்தினால் தான் எங்கள் குறைகளை சொல்ல முடியும். மாதாமாதம் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள். மேலும், மார்க்கெட் ஏலம் இன்னும் ஏன் நடத்தாமல் உள்ளீர்கள்? ஏலம் எடுக்க மனு கொடுக்க கூட தடை விதிப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது. ஏலம் எடுக்க வருபவர்களிடம், நகராட்சி நிர்வாகத்தினர் பெட்டியில் மனு போடக்கூடாது என, கூறுவதாக புகார் வருகிறது. போலீஸ் வைத்து மார்க்கெட் ஏலம் நடத்தும் அளவிற்கு நகராட்சி மார்க்கெட் ஏலம் வந்துள்ளது.
குமரன், கமிஷனர்: புகார் இருந்தால் போலீசில் புகார் செய்யுங்கள். பிரதி மாதம் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் சொல்லும் நகராட்சி அலுவலரிடம் விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

