/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அ.தி.மு.க.,விற்கு துரோகம் செய்தவர்கள் வாழ்ந்த சரித்திரம் இல்லை: மாஜி அமைச்சர்
/
அ.தி.மு.க.,விற்கு துரோகம் செய்தவர்கள் வாழ்ந்த சரித்திரம் இல்லை: மாஜி அமைச்சர்
அ.தி.மு.க.,விற்கு துரோகம் செய்தவர்கள் வாழ்ந்த சரித்திரம் இல்லை: மாஜி அமைச்சர்
அ.தி.மு.க.,விற்கு துரோகம் செய்தவர்கள் வாழ்ந்த சரித்திரம் இல்லை: மாஜி அமைச்சர்
ADDED : நவ 19, 2024 01:57 AM
அ.தி.மு.க.,விற்கு துரோகம் செய்தவர்கள்
வாழ்ந்த சரித்திரம் இல்லை: மாஜி அமைச்சர்
நாமக்கல், நவ. 19-
''அ.தி.மு.க.,விற்கு துரோகம் செய்தவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை,'' என, அக்கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
அ.தி.மு.க., சார்பில், கள ஆய்வு கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் சரோஜா, எம்.எல்.ஏ., சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:
அ.தி.மு.க.,விற்கு துரோகம் செய்தவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அ.தி.மு.க.,வை அழிக்க பலர் பல வழிகளில் வழக்கு தொடுத்தனர். அதை அனைத்தையும் தவிடு பொடியாக்கி, அ.தி.மு.க.,வை, இ.பி.எஸ்., கட்டி காத்துள்ளார். 520 பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி, தி.மு.க., ஆட்சியை பிடித்து விட்டது. மீண்டும் மக்கள் ஏமாற மாட்டார்கள். கூட்டணியை முடிவு செய்வது குறித்து, கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பார்த்துக்கொள்வார். நிர்வாகிகளாகிய நீங்கள், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்யும் பணியை கவனிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பிரபு, பொன் சரஸ்வதி, மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் ராகா தமிழ்மணி, தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முரளிபாலுசாமி, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சந்திரசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.

