/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டிஜிட்டலில் பயிர் சாகுபடி கணக்கு ஒருங்கிணைந்து முடிக்க அறிவுரை
/
டிஜிட்டலில் பயிர் சாகுபடி கணக்கு ஒருங்கிணைந்து முடிக்க அறிவுரை
டிஜிட்டலில் பயிர் சாகுபடி கணக்கு ஒருங்கிணைந்து முடிக்க அறிவுரை
டிஜிட்டலில் பயிர் சாகுபடி கணக்கு ஒருங்கிணைந்து முடிக்க அறிவுரை
ADDED : நவ 10, 2024 03:18 AM
மோகனுார்: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த, 6 முதல், டிஜிட்டல் முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கிடும் பணி தொடங்கப்பட்-டுள்ளது. விவசாயிகள் தங்கள் வயலில் சாகுபடி செய்துள்ள பயிர்-களை ஆவணப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில், கணக்-கிடும் பணி நடந்து வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், 15 வட்டாரங்களில் உள்ள, 433 வருவாய் கிராமங்களில், 8,80,284 உப சர்வே எண்களில், நாமக்கல் தனியார் வேளாண் கல்லுாரியை சேர்ந்த, 430 மாணவ, மாணவியர், ஏழு தாலுகாக்களிலும், பவானி ஆப்பக்கூடல் தனியார் வேளாண் கல்லுாரியை சேர்ந்த, 51 மாணவ, மாண-வியர், குமாரபாளையம் தாலுகாவிலும் பங்கேற்று, 'டிஜிட்டல்' முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கிடும் பணியை மேற்-கொண்டுள்ளனர்.
இந்நிலையில், மோக னுார் தாலுகா, மணப்பள்ளி கிராமத்தில் நடந்த, 'டிஜிட்டல்' முறை பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு பணியை, நாமக்கல் கலெக்டர் உமா ஆய்வு செய்தார். அப்போது, 'பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க, அலுவலர்கள் ஒருங்கி-ணைந்து செயல்பட வேண்டும்' என, அறிவுறுத்தினார்.