/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விவசாய கிணறுகளில் மோட்டார் திருட்டு குறித்து புகார் வந்தால் உடனடியாக வழக்குப்பதிய அறிவுரை
/
விவசாய கிணறுகளில் மோட்டார் திருட்டு குறித்து புகார் வந்தால் உடனடியாக வழக்குப்பதிய அறிவுரை
விவசாய கிணறுகளில் மோட்டார் திருட்டு குறித்து புகார் வந்தால் உடனடியாக வழக்குப்பதிய அறிவுரை
விவசாய கிணறுகளில் மோட்டார் திருட்டு குறித்து புகார் வந்தால் உடனடியாக வழக்குப்பதிய அறிவுரை
ADDED : நவ 01, 2025 01:14 AM
நாமக்கல், ''விவசாய கிணறுகளில் மின் மோட்டார் மற்றும் காப்பர் ஒயர் திருட்டு குறித்து புகார் வந்தால், போலீசார் உடனடியாக வழக்குப்பதிந்து விசாரிக்க வேண்டும்,'' என, கலெக்டர் துர்கா மூர்த்தி அறிவுரை வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் என, 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது நடந்த விவாதம் வருமாறு:
பாலசுப்பிரமணியம், செயலாளர், விவசாய முன்னேற்றக் கழகம்: நாமக்கல் அருகே, விவசாய நிலங்களை கையகப்படுத்தி, 'சிப்காட்' அமைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். சிப்காட் அமைப்பதை கைவிடக்கோரி தொடர்ந்து போராடும் விவசாயிகளை அரசு அழைத்து பேச வேண்டும். நாமக்கல், ப.வேலுார், புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய கிணறுகளில் உள்ள மின் மோட்டார், காப்பர் ஒயர்கள் தொடர்ந்து திருடு போவதாகவும், இதுகுறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கலெக்டர்: விவசாய கிணறுகளில் மின் மோட்டார், காப்பர் ஒயர் திருட்டு சம்பந்தமாக ஏதேனும் புகார்கள் வந்தால், உடனடியாக வழக்குப்பந்து விசாரிக்க வேண்டும் என, அறிவுறுத்தினார்.
ஸ்ரீதர், பத்து ரூபாய் இயக்கம்: பச்சுடையாம்பட்டிபுதுாரில் உள்ள நீர்வழிப்பாதையில் கல்குவாரிக்கு செல்லும் வாகனங்கள் செல்வதால், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பாதிக்கப்படுகின்றனர்.
அதிகாரி: விரைவில் கள ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
கூட்டத்தில், அரசு அதிகாரிகள், அலுவலர்கள் விவசாயிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

