/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காலாவதி சான்று பெற்ற விதைகளை மட்டுமே விற்பனை செய்ய அறிவுரை
/
காலாவதி சான்று பெற்ற விதைகளை மட்டுமே விற்பனை செய்ய அறிவுரை
காலாவதி சான்று பெற்ற விதைகளை மட்டுமே விற்பனை செய்ய அறிவுரை
காலாவதி சான்று பெற்ற விதைகளை மட்டுமே விற்பனை செய்ய அறிவுரை
ADDED : ஜூன் 05, 2025 01:22 AM
நாமக்கல், 'காலாவதி சான்று பெற்ற விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்' என, விதை விற்பனையாளர்களுக்கு, சேலம், நாமக்கல் விதை ஆய்வு துணை இயக்குனர் சித்ரா அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்கள் என, மொத்தம், 1,393 விதை விற்பனை நிறுவனங்களுக்கு விதை விற்பனை உரிமம் வழங்கப்பட்டு, விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, மக்காச்சோள பயறுவகை பயிர் விதைகள், எண்ணெய் வித்து மற்றும் காய்கறி பயிர் விதைகளை வாங்கி வயல்களில் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எனவே, விதை விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்யும்போது, விதைக்குரிய பட்டியலை கண்டிப்பாக வழங்க வேண்டும். தரமான நல்ல முளைப்புத்திறன் உடைய காலாவதி நாளுடன் கூடிய சான்று பெற்ற விதைகளையே விற்பனை செய்ய வேண்டும். உண்மை நிலை விதையாக இருப்பின் கண்டிப்பாக பதிவு சான்று பெற்றிருக்க வேண்டும். விதை விற்பனை உரிமம், இருப்பு பதிவேடு, விதைகொள்முதல் ஆவணம் மற்றும் இதர விதை விற்பனை ஆவணங்கள் சரியாக பராமரிக்க வேண்டும். இதை மீறுபவர்கள் மீது தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.