/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காவிரி ஆற்றை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை செடிகள்
/
காவிரி ஆற்றை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை செடிகள்
ADDED : டிச 29, 2024 01:07 AM
காவிரி ஆற்றை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை செடிகள்
பள்ளிப்பாளையம், டிச. 29-
பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றில், கடந்த சில நாட்களாக ஆகாயத்தாமரை செடிகள் அதிகளவில் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இது நாளுக்குநாள் மேலும் அதிகரித்து வருகிறது. ஓரிரு மாதங்களில் ஆறு முழுவதும் படர்ந்து விடும். இதனால், ஆற்றில் குளிக்கவும், துணிகளை துவைக்கவும் வழியின்றி, பொதுமக்கள் சிரமப்படுவர். அதேபோல், மீனவர்களும் பரிசலில் சென்று மீன் பிடிக்க சிரமப்படுவர். அதிகளவு ஆகாயத்தாமரை வளர்ந்த பின் அகற்றுவது கடினம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தற்போதே ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற, நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.