/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலையில் ஆக்கிரமிப்பு: போக்குவரத்து இடையூறு
/
சாலையில் ஆக்கிரமிப்பு: போக்குவரத்து இடையூறு
ADDED : ஆக 29, 2024 07:52 AM
நாமக்கல்: நாமக்கல் நகரில் பஸ் ஸ்டாண்ட், பூங்கா சாலை, கோட்டை சாலை, ஆஞ்சநேயர், நரசிம்மர் கோவில்கள், உழவர் சந்தை, மோகனுார் சாலை, சேலம் சாலை ஆகிய பகுதிகளில் மக்கள் மற்றும் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்படும். அதில், மோகனுார் சாலையில் உள்ள கனரா வாங்கி பகுதியில் ஏராளமானோர் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.
மேலும், பகல் நேரத்தில் லாரிகளை நிறுத்தி சரக்குகளை இறக்குவதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கிறது. அங்கு தனியார் மருத்துவமனைகள், ஏ.டி.எம்., மையம் ஆகியவை உள்ளதால், நோயாளிகள், பொதுமக்கள் அவசர சிகிச்சைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்து போலீசார் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட இடத்தில் பேரிகார்டுகள் வைத்து சீரான போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

