/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாசிலா அருவியை திறக்க அனுமதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு
/
மாசிலா அருவியை திறக்க அனுமதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு
மாசிலா அருவியை திறக்க அனுமதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு
மாசிலா அருவியை திறக்க அனுமதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு
ADDED : ஜன 20, 2024 01:00 AM
சேந்தமங்கலம்:நாமக்கல் மாவட்டத்தில் மூலிகைகள் அடங்கிய புகழ்பெற்ற சுற்றுலா தலமாக கொல்லிமலை உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து, 1,300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம் அருவி, மாசிலா அருவி, எட்டிக்கையம்மன் கோவில், மாசி பெரியண்ணன் கோவில், அரப்பளீஸ்வரர் கோவில், தாவரவியல் பூங்கா, படகு இல்லம், சீக்குப்பாறை வியூபாயின்ட் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன.
அரியூர் நாடு பஞ்., பகுதியில் மாசிலா அருவி அமைந்துள்ளது. வனத்துறை சார்பில், மாசிலா அருவியில் சுற்றுலா பயணியர் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக குளிப்பதற்கு மேலிருந்து கொட்டும் அருவியின் நடுவே, தடுப்புச்சுவர் அமைத்து இட வசதி ஏற்படுத்தி உள்ளனர்.
அருவி வளாகத்தில் சிறுவர் பூங்கா, உடை மாற்றும் அறைகள், நடைபாதை சீரமைத்து, சுகாதார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளுடன், வளர்ச்சி திட்டப்பணிகளை வனத்துறையினர் செய்துள்ளனர்.
மாசிலா அருவியில் பராமரிப்பு பணி முடிந்து, சுற்றுலா பயணியர் பயன்பாட்டிற்கு சில மாதங்களுக்கு முன் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அப்போது, அப்பகுதியை சேர்ந்த ஆடவர் குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து மறியல், பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மாசிலா அருவியை சுற்றுலா பயணியர் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக, கொல்லிமலை தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., சரவணன் தலைமையில் வனத்துறை, ஆடவர் குழுவினர் ஆகிய இரு தரப்பினரையும் அழைத்து பேசினார்.
வனத்துறையினர், ஊரக வளர்ச்சி துறையினர் ஆகியோர் சுற்றுலா பயணியரிடம் கட்டணம் வசூல் செய்தல், பராமரிப்பு செய்தல், வனத்துறை கட்டுப்பாட்டில் மாசிலா அருவி செயல்படுவது, ஆடவர் குழுவினரை பணியில் சேர்த்து கொண்டு செயல்படுதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு, உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
கட்டணம் நிர்ணயம் குறித்து, நாமக்கல் கலெக்டர் முடிவு எடுப்பார் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. தாசில்தார் அப்பன்ராஜ், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அசோக்குமார், பி.டி.ஓ., சரவணன், வனச்சரக அலுவலர் சுகுமார் மற்றும் ஆடவர் குழுவினர் பங்கேற்றனர்.