/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நிலக்கடலையில் பூச்சி பாதிப்பை குறைக்க வேளாண்துறை யோசனை
/
நிலக்கடலையில் பூச்சி பாதிப்பை குறைக்க வேளாண்துறை யோசனை
நிலக்கடலையில் பூச்சி பாதிப்பை குறைக்க வேளாண்துறை யோசனை
நிலக்கடலையில் பூச்சி பாதிப்பை குறைக்க வேளாண்துறை யோசனை
ADDED : மே 18, 2025 05:11 AM
நாமகிரிப்பேட்டை: நிலக்கடலை பயிரில் பூச்சி பாதிப்பை குறைக்க, நாமகிரிப்-பேட்டை வேளாண்துறையினர் யோசனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை: நாமகிரிப்பேட்டை பகு-தியில் அதிகளவு நிலக்கடலை பயிரிட்டுள்ளனர். கடலையில் சிகப்பு கம்பளி புழு பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை கட்டுப்படுத்த நிலக்கடலை பயிரில், ஐந்து வரிசை நிலக்க-டலைக்கு, ஒரு வரிசை தட்டை பயிரை ஊடு
பயிராக சாகுபடி செய்ய வேண்டும். இதில், பொறி வண்டு-களின் பெருக்கத்தை அதிகரிப்பதன் மூலம், சிவப்பு கம்பளி புழுக்களின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு தெரிவிக்-கப்பட்டுள்ளது.
களையெடுப்பு தீவிரம்
வெண்ணந்துார் ஊராட்சி ஒன்றியம், மதியம்பட்டி, அளவாய்-பட்டி, ஓ.சவுதாபுரம், அக்கரைப்பட்டி, அத்தனுார், தேங்கல்பா-ளையம், ஆர்.புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், விவிசா-யிகள், நிலக்கடலை அதிகம் விதைத்துள்ளனர். தற்போது விதைகள் முளைத்து துளிர்விட்டு இளம் செடியாக வளர்ந்துள்ள நிலையில், அதிகளவில் களைகள் வளர்ந்துள்ளன. களைக்-கொல்லி பூச்சி மருந்து அடிக்க விரும்பாத விவசாயிகள் பலரும், கூலியாட்களை வைத்து களையெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்-ளனர்.