/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பொங்கல் பண்டிகையையொட்டிகுண்டுமல்லி கிலோ ரூ.3,200க்கு விற்பனை
/
பொங்கல் பண்டிகையையொட்டிகுண்டுமல்லி கிலோ ரூ.3,200க்கு விற்பனை
பொங்கல் பண்டிகையையொட்டிகுண்டுமல்லி கிலோ ரூ.3,200க்கு விற்பனை
பொங்கல் பண்டிகையையொட்டிகுண்டுமல்லி கிலோ ரூ.3,200க்கு விற்பனை
ADDED : ஜன 15, 2025 12:26 AM
நாமக்கல் : வரத்து குறைவாலும், தேவை அதிகரிப்பாலும், பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதில், குண்டுமல்லி ஒரு கிலோ, 3,200 ரூபாய், முல்லை, 3,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், அணியாபுரம், தோப்பூர், எருமப்பட்டி ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், குண்டுமல்லி, செவ்வந்தி, அரளி, சம்மங்கி, காக்கட்டான் போன்ற மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. அவற்றை அறுவடை செய்து, நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் நடக்கும் தினசரி மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்படுகிறது. அங்கு, வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்து, சில்லறை விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
தற்போது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பூக்கள் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், தேவைக்கு ஏற்ப பூக்கள் வரத்து குறைந்துள்ளது. அதனால், பூக்களின் விலை, கடந்த வாரத்தை விட அதிகரித்தது. செவ்வந்தி ஒரு கிலோ, 300 ரூபாய், மல்லி, 3,200 ரூபாய், காக்கட்டான், 1,600 ரூபாய், சம்பங்கி, 250 ரூபாய், கனகாம்பரம், 1,200 ரூபாய், அரளி, 350 ரூபாய், ரோஜா, 600 ரூபாய், பன்னீர் ரோஸ், 200 ரூபாய், முல்லை, 3,000 ரூபாய் என, பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
'பூக்கள் வரத்து அதிகரிக்கும்போது, அதன் விலை குறைவதும், குறைவாக இருக்கும்போது, விலை உயர்வதும் வாடிக்கை. அதன்படி, வழக்கமாக, குண்டுமல்லி மற்றும் முல்லை பூ, ஒரு டன் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தற்போது, உற்பத்தி சரிந்துள்ளதால், 70 கிலோ மட்டுமே வந்தது. அதனால், அதன் விலையும், இரண்டு, மூன்று மடங்கு உயர்ந்தது. பொங்கல் பண்டிகையையொட்டி தேவை அதிகரித்துள்ளதால், பூக்கள் விலையும் உயர்ந்துள்ளது' என, விற்பனை
யாளர்கள் தெரிவித்தனர்.