/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி எளிது என நினைத்து விடக்கூடாது: துணை முதல்வர் பேச்சு

ADDED : ஜூலை 11, 2025 01:52 AM
நாமக்கல், ''அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் கூட்டணி அமைத்துள்ளனர். அதனால் நம் பணி எளிதாகிவிட்டது என்று நினைக்கக் கூடாது,'' என, துணை முதல்வர் உதயநிதி பேசினார்.
நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., தலைமை வகித்தார். இதில், துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது: ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் என்றால், மாணவரணியை தவிர்த்து பேச இயலாது. ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் சார்பு அணியினர் தனிப்பட்ட முறையில், 200 ஓட்டுகளை வைத்திருந்தீர்கள் என்றால், உங்களை யாராலும் தவிர்க்க இயலாது.
அரசின் திட்டங்களை தெருமுனை பிரசாரம் மூலம், மக்களிடம் கொண்டு சேருங்கள். சோஷியல் மீடியாக்களில், அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சிறப்பாக செயல்படுங்கள். அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் கூட்டணி அமைத்துள்ளனர். அதனால் நம் பணி எளிதாகிவிட்டது என நினைக்கக் கூடாது. தி.மு.க., தலைமையிலான ஆட்சிக்கு பல முனைகளில் மத்திய அரசு இடையூறு செய்து வருகிறது. புதிய கல்வி கொள்கை மூலம் ஹிந்தியை கொண்டு வர முயற்சி செய்கின்றனர்.
இவ்வாறு பேசினார்.
அமைச்சர்கள் மதிவேந்தன், ராஜேந்திரன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மூர்த்தி, எம்.எல்.ஏ.,க்கள் பொன்னுசாமி, ராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.