/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் தி.மு.க.,வில் ஐக்கியம்
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : டிச 16, 2024 03:14 AM
ராசிபுரம்: அ.தி.மு.க., உள்ளிட்ட மாற்று கட்சி நிர்வாகிகள், 100க்கும் மேற்-பட்டோர், நேற்று எம்.பி., ராஜேஸ்குமார் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தனர்.
வெண்ணந்துார் யூனியன், கட்டனாச்சம்பட்டியை சேர்ந்த தி.மு.க., மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் பூபாலன் மற்றும் ஒன்றிய பிரதிநிதி யுவராஜ் ஆகியோர் ஏற்பாட்டில், அ.தி.மு.க., 3வது வார்டு உறுப்பினர் கதிர்வேலு, அ.தி.மு.க., இளைஞர் பாசறை தலைவர் இந்திர-வாணன் ஆகியோர் தலைமையில், 100க்கும் மேற்பட்ட, அ.தி.மு.க.,வினர் அக்கட்சியில் இருந்து விலகி, எம்.பி., ராஜேஸ்குமார் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தனர். நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் துரைசாமி, பேரூர் செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

