/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ப.வேலுாரில் கடையடைப்பு அ.தி.மு.க.,-பா.ம.க., ஆதரவு
/
ப.வேலுாரில் கடையடைப்பு அ.தி.மு.க.,-பா.ம.க., ஆதரவு
ADDED : நவ 29, 2024 01:28 AM
ப.வேலுாரில் கடையடைப்பு
அ.தி.மு.க.,-பா.ம.க., ஆதரவு
ப.வேலுார், நவ. 29--
கடை உரிமை கட்டணம், தொழில் வரி, சொத்து வரி உயர்வை கண்டித்து, ப.வேலுார் நகர அனைத்து வர்த்தகர் சங்கம் சார்பில், இன்று கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். இதற்கு பரமத்தி வேலுார் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சேகர், பா.ம.க., நகர செயலர் கணேஷ் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, ப.வேலுார் நகர அனைத்து வர்த்தக சங்க நிர்வாகிகள் கூறுகையில்,' ப.வேலுார் டவுன் பஞ்., சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தொழில் வரி, சொத்து வரி உயர்வை கைவிட வேண்டும் என வலியுறுத்தி நடைபெறும் கடையடைப்பு போராட்டத்திற்கு அ,தி,மு,க.,-பா.ம.க.,வினர் மற்றும் ப.வேலுார் வட்டார போட்டோ, வீடியோ சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்,' என்றனர்.
பரமத்தி வேலுார் எம்.எல்.ஏ., சேகர் கூறுகையில்,''டவுன் பஞ்சாயத்து சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தொழில் வரி, சொத்து வரி, கடை உரிமை கட்டணம் ஆகியவற்றுக்கு வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், பொதுமக்கள், வணிகர்கள் நலன் கருதி கடை அடைப்பு போராட்டத்திற்கு அ.தி.மு.க., சார்பில் முழு ஆதரவு அளித்துள்ளோம்,'' என்றார்.