/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அமைச்சர் பொன்முடியை கண்டித்து அ.தி.மு.க., மகளிரணி ஆர்ப்பாட்டம்
/
அமைச்சர் பொன்முடியை கண்டித்து அ.தி.மு.க., மகளிரணி ஆர்ப்பாட்டம்
அமைச்சர் பொன்முடியை கண்டித்து அ.தி.மு.க., மகளிரணி ஆர்ப்பாட்டம்
அமைச்சர் பொன்முடியை கண்டித்து அ.தி.மு.க., மகளிரணி ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 19, 2025 01:56 AM
ராசிபுரம்:
தி.மு.க., அமைச்சர் பொன்முடியை கண்டித்து, அ.தி.மு.க., மகளிரணி சார்பில், நேற்று ராசிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெண்களை இழிவாக பேசியது மற்றும் ஹிந்து மதத்தை அவதுாறாக பேசிய, தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடியை கண்டித்தும், அவர் பதவி விலக கோரியும், நாமக்கல் மாவட்ட, அ.தி.மு.க., மகளிரணி சார்பில், ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் சரோஜா, பரமத்தி வேலுார் எம்.எல்.ஏ., சேகர் மற்றும் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில், தங்கமணி பேசியதாவது:
தி.மு.க., எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. பெண் குழந்தைகளை, பள்ளிக்கு அனுப்ப அச்சமாக உள்ளது. தமிழகம் முழுவதும் கஞ்சா, கள்ளச்சாராயம் உள் ளிட்ட போதை பொருட்களின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. கடந்த பார்லிமென்ட் தேர்தலில் தனித்து நின்றதால் வெற்றி வாய்ப்பை இழந்தோம். ஆனால், இப்போது இ.பி.எஸ்., தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு வருகிறது. 10 மாத காலத்தில், தி.மு.க., ஆட்சிக்கு தமிழக மக்கள் முடிவு கட்டுவர்.
இவ்வாறு அவர் பேசினார்.