/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அழகப்பன், அக்னிகுமார்த்தி கோவிலில் 16ல் கும்பாபிஷேகம்
/
அழகப்பன், அக்னிகுமார்த்தி கோவிலில் 16ல் கும்பாபிஷேகம்
அழகப்பன், அக்னிகுமார்த்தி கோவிலில் 16ல் கும்பாபிஷேகம்
அழகப்பன், அக்னிகுமார்த்தி கோவிலில் 16ல் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 13, 2025 02:05 AM
மோகனுார், மோகனுார் தாலுகா, என்.புதுப்பட்டியில் அழகப்பன், அக்னிகுமார்த்தி அம்மன் கோவில் உள்ளது.
இக்கோவில் திருப்பணி, மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. திருப்பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், வரும், 16ல் கும்பாபிஷேகம் நடந்த விழாக்குழுவினர் முடிவு செய்தனர்.
கடந்த, 30ல் முகூர்த்தக்கால் நடப்பட்டு, கங்கனம் கட்டி, முளைப்பாரி போடப்பட்டது. தொடர்ந்து, நேற்று இரவு, 9:00 மணிக்கு, புண்யாக வாசனம், கிராம சாந்தி பூஜை நடந்தது.
இன்று காலை, 9:00 மணிக்கு, கணபதி, லட்சுமி ஹோமம், பிரசாதம் வழங்குதல், மாலை, 4:25 மணிக்கு, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, தீபாராதனை, நாளை காலை, 6:30 மணிக்கு கோ பூஜை, காவிரி ஆற்றுக்கு தீர்த்தம் எடுக்க செல்லுதல், மாலை, 4:30 மணிக்கு, கும்பலங்காரம், யாகசாலை பிரவேசம் நடக்கிறது.
வரும், 15 காலை, 7:30 மணிக்கு, இரண்டாம் கால யாகம், இரவு, 9:30 மணிக்கு, அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 16 அதிகாலை, 5:30 மணிக்கு, யாக மண்டப பூஜை, நாடி சந்தானம், காலை, 6:00 மணிக்கு, வீட்டு கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது.
தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு, காட்டுக்கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. அதையடுத்து, சுவாமி தரிசனம், பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை, குறும்பகவுண்டர் உதயகுலம் பங்காளிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

