ADDED : அக் 14, 2024 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, வெடியரசம்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசா-ருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று மாலை போலீசார் அப்பகுதியில் கண்காணித்தனர்.
அப்போது அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் சித்-தையன், 56, என்பவர் மளிகை கடையில் மது பாட்டில் விற்-பனை செய்து கொண்டிருந்தார். பள்ளிப்பாளையம் போலீசார் சித்-தையனை கைது செய்து, 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்-தனர்.