/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சந்தைக்கு 'கேட்' காசு அதிகரிப்பால் ஆடுகள் வரத்து சரிந்ததாக குற்றச்சாட்டு
/
சந்தைக்கு 'கேட்' காசு அதிகரிப்பால் ஆடுகள் வரத்து சரிந்ததாக குற்றச்சாட்டு
சந்தைக்கு 'கேட்' காசு அதிகரிப்பால் ஆடுகள் வரத்து சரிந்ததாக குற்றச்சாட்டு
சந்தைக்கு 'கேட்' காசு அதிகரிப்பால் ஆடுகள் வரத்து சரிந்ததாக குற்றச்சாட்டு
ADDED : ஆக 19, 2025 03:26 AM
எருமப்பட்டி, எருமப்பட்டி யூனியன், பவித்திரத்தில் வாரந்தோறும் ஆட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு, எருமப்பட்டி, முட்டாஞ்செட்டி, கஸ்துாரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
வார துவக்கத்தில் நடக்கும் சந்தைக்கு, முசிறி, தொட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள், இறைச்சிக்கடைக்கு தேவையான ஆடுகளை வாங்க வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், சில ஆண்டுகளாக பவித்திரம் ஆட்டுச்சந்தைக்கு, ஆடுகள் வரத்து நாளுக்கு நாள் குறைந்துள்ளதுடன், வியாபாரிகள் வருகையும் வெகுவாக குறைந்துள்ளது. நேற்று நடந்த சந்தைக்கு, ஆடுகள் வரத்து மிகவும் குறைந்ததால், ஐந்து லட்சம் ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து, ஆடு வியாபாரி முருசேன் கூறியதாவது:
பவித்திரம் ஆட்டுச்சந்தை மிகவும் பழமை வாய்ந்தது. ஆனால், சில ஆண்டாக சந்தைக்கு ஆடுகள் கொண்டு வரும் விவசாயிகளிடமும், வியாபாரிகளிடமும், 'கேட்' காசு என்ற பெயரில், ஒரு ஆட்டிற்கு, 100 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். இதனால், விவசாயிகள், வியாபாரிகள் வரத்து நாளுக்கு நாள் குறைந்து, தற்போது சந்தை மூடும் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, பி.டி.ஓ., நடராஜன் கூறுகையில், ''பவித்திரம் சந்தைக்கான ஏலம், மூன்று முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. செவ்வந்திப்பட்டியில் ஒரு சந்தை நடப்பதால், இந்த சந்தைக்கு ஏலம் எடுப்பவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதனால், யூனியன் சார்பில் பணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால், 100 ரூபாய் வசூலிப்பதில்லை,'' என்றார்.