/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அலையன்ஸ் ஏர் விமானம் ரத்து பயணிகள் மத்தியில் அதிருப்தி
/
அலையன்ஸ் ஏர் விமானம் ரத்து பயணிகள் மத்தியில் அதிருப்தி
அலையன்ஸ் ஏர் விமானம் ரத்து பயணிகள் மத்தியில் அதிருப்தி
அலையன்ஸ் ஏர் விமானம் ரத்து பயணிகள் மத்தியில் அதிருப்தி
ADDED : ஜூலை 15, 2025 01:56 AM
ஓமலுார், தொடர்ந்து ஆறு நாட்களாக, அலையன்ஸ் ஏர் விமானம் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு இண்டிகோ விமான நிறுவனம் விமான சேவையை இயக்கி வருகிறது. இதே போல் அலையன்ஸ் ஏர் நிறுவனம், சேலம்-பெங்களூரு, சேலம்-கொச்சி நகரங்களுக்கு விமான சேவையை இயக்கி வருகிறது. சென்னை நீங்கலாக மற்ற நகரங்கள் அனைத்தும், மத்திய அரசின் 'உடான்' திட்டத்தில் மிக குறைந்த கட்டணத்தில் இயக்கப்படுகிறது.
பெங்களூரு, கொச்சி செல்லும் அலையன்ஸ் ஏர் விமானத்தில் சராசரியாக, 40 முதல் 45 பேர் பயணிக்கின்றனர். ஆனால், பல்வேறு காரணங்களால் அடிக்கடி விமான சேவை ரத்து செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள், கல்லுாரி மாணவ, மாணவியர், சுற்றுலா செல்லும் பயணிகள் அதிருப்தி அடைகின்றனர். விமானத்தில் செல்ல தயாராக இருக்கும் நேரத்தில், ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கும் போது, பயணிகள்- அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
நடப்பு ஜூலையில், 4, 7, 9, 10, 11, 12, 13, 14 ஆகிய நாட்களில் அலையன்ஸ் ஏர் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அதிகரிகளிடம் கேட்ட போது, 'தொழில்நுட்பக் கோளாறு மற்றும் வேறு விமானம் இல்லாததால் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது' என தெரிவிக்கின்றனர்.
பல்வேறு போராட்டங்களுக்கு பின், மீண்டும் சேலத்தில் விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அடிக்கடி விமான சேவை ரத்து செய்வதால், பயணிகள் எண்ணிக்கை குறையும் அபாயம் உள்ளது. எனவே, அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் முறையாக விமானத்தை இயக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.