/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெயிலில் வேலை செய்யும் விவசாயிகளுக்கு குளிர்பானம் வழங்கி அசத்தும் சிறுவர்கள்
/
வெயிலில் வேலை செய்யும் விவசாயிகளுக்கு குளிர்பானம் வழங்கி அசத்தும் சிறுவர்கள்
வெயிலில் வேலை செய்யும் விவசாயிகளுக்கு குளிர்பானம் வழங்கி அசத்தும் சிறுவர்கள்
வெயிலில் வேலை செய்யும் விவசாயிகளுக்கு குளிர்பானம் வழங்கி அசத்தும் சிறுவர்கள்
ADDED : மே 04, 2024 07:02 AM
எருமப்பட்டி : நாமக்கல் - திருச்சி மாவட்ட எல்லை, பவித்திரம் புதுார் அருகே தாத்தையங்கார் பேட்டை உள்ளது. இங்குள்ள பில்லாதுறை கிராமத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் மழை, வெயிலிலும் தினக்கூலி வேலைக்கு சென்றால் தான், அடுத்த வேலை உணவு என்ற வகையில் வாழ்ந்து வருகின்றனர். தற்போது, கடும் வெயில் கொளுத்தி வரும் நிலையில், விவசாய கூலி தொழிலாளர்கள் தலையில் துணியை போர்த்திக்கொண்டு சோளத்தட்டு அறுத்தல், களை எடுத்தல், வயலில் நாற்று நடுதல் உள்ளிட்ட விவசாய பணிகளை செய்து வருகின்றனர். காலை, 6:00 மணிக்கு வேலைக்கு சென்றால், மாலை, 4:00 மணி வரை வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில், இந்த கிராமத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை வைத்து, குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்களை வாங்கி அவர்களுக்கு வழங்கி வருகின்றனர். அவர்களை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.இதுகுறித்து, 7ம் வகுப்பு மாணவர் சபரி கூறியதாவது: பள்ளிகளுக்கு விடுமுறை விட்டதால், நாங்கள் ஜாலியாக விளையாடி வந்தேம். சில நாட்களாக இப்பகுதியில் அதிக வெயிலால் எங்களால் விளையாட முடியவில்லை. ஆனால், அருகில் உள்ள ஒரு விவசாய நிலத்தில், முதியவர்கள் கூட வெயிலை பொருட்படுத்தாமல் சோளத்தட்டை அறுத்துக் கொண்டிருந்தனர். இவர்களை பார்த்ததும் மிகவும் வேதனை அடைந்து, அவர்களுக்கு உதவ வேண்டும் என, நண்பர்கள் சேர்ந்து முடிவெடுத்தோம். பின், நாங்கள் உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தில், குளிர்பானம், தண்ணீர் பாட்டில்களை வாங்கி, அவர்களுக்கு வழங்கி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.