/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தீபாவளியன்று ஆம்புலன்ஸ் சேவை அவசர அழைப்பு 49 சதவீதம் அதிகரிப்பு
/
தீபாவளியன்று ஆம்புலன்ஸ் சேவை அவசர அழைப்பு 49 சதவீதம் அதிகரிப்பு
தீபாவளியன்று ஆம்புலன்ஸ் சேவை அவசர அழைப்பு 49 சதவீதம் அதிகரிப்பு
தீபாவளியன்று ஆம்புலன்ஸ் சேவை அவசர அழைப்பு 49 சதவீதம் அதிகரிப்பு
ADDED : அக் 22, 2025 01:39 AM
நாமக்கல், சுகாதாரத்துறை திட்டத்தின் கீழ் செயல்படும், '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவை, தீபாவளியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டது.
இதுகுறித்து, மாவட்ட மேலாளர் அறிவுக்கரசு கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், தீபாவளியன்று, '108' அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்கள், 26 எண்ணிக்கையில், 24 மணி நேரமும், நுாறு சதவீதம் இயக்கினோம். அடையாளம் காணப்பட்ட 'ஹாட்ஸ்பாட்டு'களில், ஆம்புலன்ஸ்களை நிறுத்தி வைத்திருந்தோம். பொதுமக்களுக்கு விரைவாக பதிலளிக்கவும், கிடைக்கவும், ஜி.பி.எஸ்., அடிப்படையில் ஆம்புலன்ஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
தீபாவளி அன்று, வழக்கத்தை காட்டிலும், 49 சதவீதம் அவசர அழைப்புகள் அதிகரித்திருந்தன. குறிப்பாக, நாமக்கல் மாவட்டத்தில், தீபாவளி அன்று, 198 அவசர அழைப்புகள் வந்தன. மற்ற நாட்களில், 96 அழைப்புகள் மட்டுமே வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.