/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் குதுாகலம்
/
கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் குதுாகலம்
ADDED : அக் 22, 2025 01:40 AM
நித்திய சுமங்கலி மாரியம்மன்
கோவிலில் பூச்சாட்டு விழா
ராசிபுரம், அக். 22
ராசிபுரம்-நாமக்கல் சாலையில் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசியில், தேர் திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு விழா, நேற்று இரவு அம்மனுக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. சிறப்பு பூஜைக்கு பின் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் பூந்தட்டுடன், சேலம் ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு பூஜை செய்தபின், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பட்டத்தரசி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கடைசியாக நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு பூக்களால் பக்தர்கள் அபிஷேகம் செய்தனர்.
கடந்த, 16ல் விழா பந்தல் போட முகூர்த்தக்கால் நடப்பட்டது. நாளை, கம்பம் நடும் நிகழ்ச்சி நடக்கிறது. நவ., 4ல் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சிக்கு, கொடியேற்றம் நடக்கவுள்ளது. நவ., 5ல் பொங்கல் வைபவம், 6ல் தீமிதி விழா, மாலை தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி, 8ல் சத்தாபரணம் நிகழ்ச்சி நடக்கிறது. நவ., 8 வரை மண்டகப்படி கட்டளையும், 10 முதல், 23 வரை விடையாற்றி கட்டளையும் நடக்கவுள்ளது. இந்த கட்டளை நிகழ்ச்சிகளின் போது, அம்மன் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
சேந்தமங்கலம்,நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, தமிழகத்தின் சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி, தொடர் விடுமுறை விடப்பட்டதால், கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். தற்போது கொல்லிமலையில், தொடர் மழை பெய்து வருகிறது. மேலும், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக, கொல்லிமலை முழுவதும் சாரல் மழை பெய்வதால் சுற்றுலா பயணிகள் குதுாகலமடைந்துள்ளனர்.
தொடர் மழையால், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி, சிற்றருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி இல்லை. அதனால், மாசிலா அருவி மற்றும் நம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
தீபாவளி விடுமுறையால்
மின்தடை தள்ளிவைப்பு
நாமகிரிப்பேட்டை, அக். 22
தீபாவளி விடுமுறையால், நாமகிரிப்பேட்டையில் நேற்று அறிவிக்கப்பட்ட மின்தடை தள்ளி வைக்கப்பட்டது.
துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி செய்வதற்கு வசதியாக, மாதத்தில் ஒரு நாள் மின் தடை செய்வது வழக்கம். நாமகிரிப்பேட்டையில் விசைத்தறிகள் அதிகம் உள்ளன. தறி உரிமையாளர்கள் அமாவாசையில் தான் கணக்கு முடிப்பது, பாவு எடுத்து வருவது உள்ளிட்ட வேலைகளை செய்வர்.
இதனால், அவர்களுக்கு தொந்தரவு இருக்க கூடாது என்பதற்காக, நாமகிரிப்பேட்டை துணை மின் நிலையத்தில் அமாவாசை தினத்தில் தான் பராமரிப்பு பணிக்கு மின் தடை செய்யப்படுகிறது. நேற்று அமாவாசையாக இருந்தாலும், தீபாவளி பண்டிகை விடுமுறை என்பதால் மின் தடை தள்ளிவைக்கப்பட்டது. வரும், 28ல் மின்தடை இருக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.