/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மனைவி கழுத்தை நெரித்து கொன்ற கணவனுக்கு வலை
/
மனைவி கழுத்தை நெரித்து கொன்ற கணவனுக்கு வலை
ADDED : அக் 22, 2025 03:29 AM
நாமக்கல்: நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், மனைவி கழுத்தை நெரித்து கொலை செய்து கணவர் தலைமறை வானார்.
நாமக் கல் அடுத்த காவேட்டிப்பட்டியை சேர்ந்தவர் பாஸ்கர், 45; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சித்ரா, 38. தம்பதியருக்கு ஜெகதீசன், 17, தினேஷ், 13, என, இரண்டு மகன்கள் உள்ளனர். பாஸ்கருக்கு, சித்ராவின் நடத்தையில் சந்தேகம் இருந்துள்ளது. இதனால், குடித்துவிட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கணவரின் கொ டுமை தாங்காமல், ஓராண்டுக்கு முன் சித்ரா கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றார். சமாதானம் செய்து அழைத்து வந்த பாஸ்கர், ஏழு மாதமாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். மீண்டும் மனைவி நடத்தையில் சந்தேகமடைந்த பாஸ்கர், தினமும் மது குடித்துவிட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு வழக்கம்போல் கணவன், மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. மகன்கள் இருவரும், ஒரு அறையில் துாங்கினர். நேற்று காலை, 6:00 மணிக்கு, மகன் ஜெகதீசன் எழுந்து பார்த்தபோது, சித்ரா கழுத்து நெரி த்து கொலை செய்யப்பட்டு, சடலமாக கிடந்தார். நாமக்கல் போலீசார் தலைமறைவான பாஸ்கரை தேடி வருகின்றனர்.