/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மொபைல் போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு
/
மொபைல் போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு
மொபைல் போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு
மொபைல் போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு
ADDED : டிச 16, 2024 03:11 AM
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம், மேல்முகம் கிராமம் மாமரப்பட்டியை சேர்ந்-தவர் வெங்கடேஷ், 40; திருமணம் ஆகவில்லை. தாயார் வள்ளி-யம்மாள், 65, என்பவருடன் வசித்து வருகிறார்.
பட்டதாரியான இவர், கால்நடைகளை வளர்த்து வருகிறார். இவ-ருக்கும், அதே பகுதியை சேர்ந்த பெரியப்பா சத்தியமூர்த்தி மகன் சரவணன், 50, என்பவருக்கும் இடையே சொத்து தகராறு உள்-ளது. இதுசம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வருகிறது.இந்நிலையில், வெங்கடேஷ், நேற்று முன்தினம், சொத்து பிரச்னை சம்பந்தமாக வழக்கு நடந்து வரும் நிலத்தில், கால்ந-டைகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். இதனால் சரவணனுக்கும், வெங்கடேஷூக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த வெங்கடேஷ், வையப்பமலை மெயின் ரோட்டில் உள்ள மொபைல் போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்றார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த மல்லசமுத்திரம் போலீஸ் எஸ்.ஐ., ரஞ்சித்குமார் தலைமையிலான போலீசார், வெங்கடே-சிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு மணி நேர போராட்டத்-திற்கு பின், சமதானமடைந்த வெங்கடேஷ், மொபைல் போன் டவரை விட்டு கீழே இறங்கினார். இதனால் அப்பகுதியில் பரப-ரப்பு ஏற்பட்டது.

